புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

 
மக்களே கவனமா இருங்க!! மீண்டும்புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!
 

தமிழகத்டில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நவம்பர் 22ம் தேதி  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று நவம்பர் 23ம் தேதி   தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து இருந்தது.

5 மாவட்டங்களில் கன மழை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில்  தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை வரை நவம்பர் 24ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை


ஏற்கனவே, 22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்  லேசான பனி மூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web