கள்ளக்காதலால் விபரீதம்.. 4 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

 
கள்ளக்காதல்
 

மதுரை மாவட்டம் பேரையூர்  குச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  ராம்குமார் . இவரது மனைவி 30 வயது ஆனந்தஜோதி. இவர்களுடைய மகன் 4 வயது ஜீவா. ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த மருதுபாண்டிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.  அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்
இந்நிலையில் ஆனந்தஜோதி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதை 4 வயது மகன் ஜீவா பார்த்து விட்டான். எங்கே தனது கணவரிடம் மகன் சொல்லிவிடுவானோ என்ற பயம் வந்தது. இதனையடுத்து  மகன் என பார்க்காமல் சிறுவன் ஜீவாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதன் பிறகு  விஷப்பூச்சி கடித்து மகன் மயங்கி விழுந்தாக அக்கம் பக்கத்தில் கூறினார். உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனை  பரிசோதித்ததில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

சிறுவன் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அருகிலுள்ள  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்ததில்  தாய் ஆனந்தஜோதி மீது சந்தேகம் வலுத்ததால் போலீசார் தாயிடம் தீவிர விசாரணை செய்ததில் கள்ளக்காதல் உறவு தெரியவந்தது.

தகாத உறவால் பெற்ற மகனையே தாயே கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனையடுத்து தாய் ஆனந்தஜோதி, கள்ளகாதலன் மருதுபாண்டி இருவரையும்   2020 ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 5வது கூடுதல் முதன்மை மாவட்டநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குற்றம் நிருபனம் ஆனதால் ஆனந்தஜோதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனையும், ரூ5000  அபராதமும் கள்ளக்காதலன் மருதுபாண்டியை வழக்கிலிருந்து விடுதலை செய்தும்  தீர்ப்பளித்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web