வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் கடந்த இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மழைக்காலங்களில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே தனியே அனுப்பாதீர்கள். மின் சாதனங்களை கவனமுடனும், பாதுகாப்புடனும் கையாளுங்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!