சிக்னலில் நின்ற காரில் மோதிய லாரி... ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உடல் நசுங்கி பலி!

 
செங்கல்பட்டு

 தமிழகத்தில் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் கார் ஒன்று நின்றுகொண்டிந்தது. இந்தகாரின் பின்னால்  வந்த கனரக லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

செங்கல்பட்டு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார், ராட்சத கிரேன் உதவியுடனும்,  போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து காரில் சிக்கிய ஆறு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணன், அய்யனார், மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மதுரையை சேர்ந்த ஆறு பேர் சென்னை துரைப்பாக்கத்தில் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் மதுரை செல்லும் போது விபத்து நடந்துள்ளது. செங்கல்பட்டு அருகே சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web