சுற்றுலா சென்ற இடத்தில் பெரும் விபரீதம்.. கடலில் மூழ்கி இளைஞர் பலி.. மேலும் இருவர் மாயம்!
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.காம் படிக்கும் 17 மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 30) மாமல்லபுரத்திற்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிக்கு பின்புறம் உள்ள கடலில் குளித்தனர். அப்போது, சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரோஷன் (21) என்பவர் ராட்சத அலையில் சிக்கி கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (19), கவுதம் (19) ஆகியோர் கடலில் காணாமல் போயினர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இறந்த மாணவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான இருவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர காவல்படை போலீசார் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வந்த மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி இருவர் கடலில் காணாமல் போனதால், உடன் வந்தவர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!