10,000 பேருக்கு கடா விருந்து... களைகட்டிய கருப்பண்ணசாமி கோயில்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் செல்வ கருப்பண்ணசாமி கோவிலின் 16ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 10,000 பக்தர்களுக்கு கிடா விருந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் செல்வ கருப்பணசாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதன் பின்னர், பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு காணிக்கையாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு அசைவ உணவு சமைக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு படையலிட்டு, கோவிலுக்கு வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!