20 அடி பள்ளத்தில் மண்ணில் புதைந்த மாநகராட்சி தொழிலாளி 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு!

 
திருச்சி


 
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில், திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த 46 வயதான செல்வம்  என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் புதையுண்டார்.
குடிநீர்குழாய் சீரமைப்பதற்காக ஒப்பந்த முறையில் அழைத்துவந்த மாநகராட்சி ஊழியர்  தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் மாநகராட்சியினர் பணிகளை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ்

இதனால்  ஒப்பந்த ஊழியர் புதையுண்ட அவலம் நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.மண்ணில் புதைந்த ஒப்பந்த தொழிலாளரை  மீட்கும் பணியில்    தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு இருந்த நிலையில்  சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளியை உயிருடன் மீட்டுள்ளனர். 20 அடி பள்ளத்தில் மண்ணில் புதைந்த நபரை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

மண்ணில் புதைந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளி 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இனி  வரும்  காலங்களில் இது போன்று பணியில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web