பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. பகீர் வீடியோ!
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தக்சும் என்ற இடத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கிஷ்தார் பகுதியில் இருந்து மார்வா பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
#WATCH | Jammu and Kashmir: People of the same family met with a car accident in the Daksum area of Anantnag district. Further details awaited. pic.twitter.com/zDoU7eJqXv
— ANI (@ANI) July 27, 2024
விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும், 2 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த டாடா சுமோ டக்சம் அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!