போதை நெட்வொர்க்கில் 25 வயது இளம்பெண்... கல்லூரி மாணவர்கள், ஆபீஸ் பாய், ரூம் பாய் என சாம்ராஜ்ஜியமே நடத்திய மவுசியா!
4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மணலியை சேர்ந்த மவுசியா (வயது 25) என்பது தெரியவந்தது.இளைஞர்கள், பெண்கள், பப் செல்பவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மௌசியாவின் தந்தை அக்பர் அலி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தந்தை கைது செய்யப்பட்டதையடுத்து தந்தையின் தொழிலை கையில் எடுத்த மகள், தந்தையின் பழக்கத்தை பின்பற்றி போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!