திருத்தணியில் தீ விபத்து... 1 வயது குழந்தை பலியான சோகம்... 3 பேர் தீக்காயம்!
தமிழகத்தில் திருத்தணியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் உள்ள 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பிரேம்குமார் (32). இவரது வீட்டின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களில் பரவிய தீ, தொடர்ந்து முதல் தளத்தில் இருந்த பிரேம்குமார் வீட்டினுள் பரவியது. இதில் வீட்டிலிருந்த பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா (31), குழந்தைகள் மிதுலன் (2), நபிலன்(1) உள்ளிட்ட 4 பேரும் தீக்காயம் அடைந்தனர்.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, 4 பேரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக 4 பேரும் மேல் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 1 வயது குழந்தை நபிலன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!