உங்கள் நட்சத்திரத்துக்கு ராசியான தொழில் எது? இந்த வியாபாரம் அதிக லாபத்தை தரும்?

 
பணம்

பல மரம் கண்டவன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான் என்பார்கள். பல தொழில்கள் செய்து பார்த்தாச்சு.. ஆனால், எந்த தொழிலுமே கைவரலை.. லாபம் வரலைன்னா கூட பரவாயில்லை.. தொழிலைக் கத்துக்கிட்டோம்னு நெனைச்சுக்கலாம்.. .போட்ட முதலீடே கடல்ல கரைச்ச பெருங்காயமா போச்சு என்று புலம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தொழில் செய்யறதுக்கு எல்லாம் தனியான திறமை வேணும் என்று இடித்துக் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற தொழில் செய்து பாருங்க. உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற தொழில் எது என பார்க்கலாம் வாங்க. இது ஜோதிடரின் கருத்து தான்.  சுய ஜாதகத்தை பார்த்து தொழில்காரகணை கணித்து சொல்வோரும் உண்டு. அதனால், இதில் உள்ள தொழிலைத் தேர்ந்தெடுக்காதவர்கள், வருத்தப்பட தேவையில்லை. உங்களுடைய சுய ஜாதகத்தின் தொழில்காரகணை வைத்தும் தொழிலைத் துவங்கலாம்.

இந்த தொழில்கள் தான் குறிப்பிட்ட நட்சத்திரகாரர்களுக்கு ஏற்றம் தரும் என்பதல்ல. இது சம்பந்தமான தொழில்கள் அவர்களுக்கு எளிதில் வசப்படும் என்பது தான். சம்பாதிப்பதில் எல்லோருக்கும் ஆசையும் ஆர்வமும் உண்டு. ஆனால் விரும்பிய துறையில் பணிபுரியும் வாய்ப்பும் யோகமும் ஒரு சிலருக்கே அமையும். அந்த வகையில் நட்சத்திரப்படி அவரவருக்கு ஏற்ற தொழில் துறைகளை பிரபல ஜோதிட நிபுணர் கணித்துள்ளார். இந்த துறைகளில் முயற்சிக்க எளிதாக முன்னேற்றம் பெற்று தொழிலில்  பெரும் லாபம் பெறலாம். ஆனால் அவரவர் சுய ஜாதகத்திற்கேற்ப சிலருக்கு பலன்களும், துறைகளும் வேறுபடலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். 

அஸ்வினி

காவல்துறை, மருத்துவம், ரயில்வே,  வணிகர் 

பரணி

இசை , விளையாட்டு, வெள்ளி , கால்நடை மருத்துவர், ஹோட்டல் 

கார்த்திகை

ராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, பாதுகாப்புத் துறை  நடனம் 

ரோகிணி

ஹோட்டல், மோட்டர் வாகனம், திருமண தரகர், வியாபாரி

மிருகசிரீஷம்

இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுனர் 

திருவாதிரை

சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், தந்தி பணியாளர், போக்குவரத்துத் துறை 

புனர்பூசம்

பத்திரிக்கை, எடிட்டிங்,  வக்கீல், பேராசிரியர் , ஜோதிடர் 

ராசிபலன் rasibalan astrology rasi

பூசம்

கடற்படை, கப்பலில் வேலை, எஞ்ஜினியர், ப்ளம்பிங்

ஆயில்யம்

ஆடிட்டர், ட்ராவலிங் ஏஜெண்ட், ஜோதிடம், எழுத்தர் 

மகம்

காண்ட்ராக்ட், லாயர்,  மருத்துவம், அரசுத்துறை, ஆபரணத் தயாரிப்பு 

பூரம்

அரசு வேலை, இசை, விளையாட்டு, ஆட்டோமொபைல் , புகைப்படக்கலை, 

உத்திரம்

காண்ட்ராக்டர், விரிவுரையாளர்,  தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை.

ஹஸ்தம்

ஷிப்பிங் & கிளியரிங், டெக்ஸ்டைல், பொறியாளர், வக்கீல்

சித்திரை

லாயர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில், வானொலி, தொலைக்காட்சி

ராசிபலன் சனி
சுவாதி

ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து,  எக்ஸரே, விஞ்ஞானிகள், நீதிபதி,ஆடை வடிவமைப்பாளர்

விசாகம்

ட்ராவலிங் ஏஜண்ட், ஏர் ட்ராவல்,  கஸ்டம்ஸ், ஆடிட்டர் 

அனுஷம்

பொறியாளர், நடிகர்,  ஆயில் என்ஜின் மற்றும் வியாபாரி,பல் மருத்துவர்

கேட்டை

கெமிக்கல் இன்ஜினியர், பிரஸ், பதிப்பாளர், விளம்பரத்துறை, இசைக்கருவிகள் தயாரிப்பாளர்கள்.

மூலம்

வக்கீல், மத போதகர், மருத்துவர், பேச்சாளர், பலசரக்குக் கடை

பூராடம்

வட்டித் தொழில், கேஷியர், கணக்காளர், ஏர் டிராவல் ஏஜெண்ட்ஸ், போக்குவரத்து, இசை, உணவுவிடுதிகள்

உத்ராடம்

இன்ஜினியர் ,  காண்ட்ராக்டர், நீதிபதி, எக்ஸ்போர்ட் ப்ரமோஷன், கஸ்டம்ஸ்.

திருவோணம்

நிலக்கரி,  விவசாயி, உயர்பதவிகள் மற்றும் டிரஸ்ட்.

அவிட்டம்

இன்ஜினியர், தொழில்துறை, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, பிரஸ் மற்றும் தொலைபேசித் துறை

சதயம்

விஞ்ஞானி, விமானப் பயணங்கள், வானசாஸ்திரம், ஜோதிடம் .

பூரட்டாதி

ஆசிரியர்,  மருத்துவம், அரசியல்வாதி, லாயர்

உத்திரட்டாதி

பொறியாளர்,  பரம்பரைத் தொழில், மருத்துவமனை,  நீர்மூழ்கி கப்பல், குடை, மழைக் கோட்டு தயாரிப்பாளர்

ரேவதி

எடிட்டர், மதத் தலைவர், சட்டம், சிவில் இன்ஜினியர் , விளம்பரத்துறை, ஜோதிடர், பதிப்பாளர்கள்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web