வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

 
கார் சாவி

வலது கையில் கார் சாவி! இடது கையில் வீட்டு சாவி! விசித்திர மனிதன் வீடியோ வைரல்!


டெஸ்லா காரை வைத்திருக்கும் பிராண்டன் டலாலி என்ற இளைஞர் காரின் சாவியை தனது வலது கைக்குள் பொருத்திக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



பிராண்டன் டலாலி என்ற நபர் தான் வைத்திருக்கும் டெஸ்லா காரின் சாவியை தன்னுடனேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அதன் விளைவாக தனது வலது கைக்குள் அதனை பொருத்திக் கொண்டுள்ளார். அதன் மூலம் வெறுமனே அவர் தனது கைகளை காட்டியதும் கார் திறப்பதையும் வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ட்விட்டர்  வாசகர்கள் ஆச்சரியத்தை வாயடைத்து போயுள்ளனர்.

 மேலும் தனது இடது கையில் பிராண்டன் டலாலி மற்றொரு சிப்பை வைத்துள்ளார். அதில் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த அட்டை, அவரது வீட்டின் சாவு, அவரது விசிட்டிங்  கார்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் வைத்துள்ளார். தனது எண்ணத்தின்படி டது கையில் வீட்டு சாவியையும், வலது கையில் கார் சாவியையும் அவர் பொருத்திக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

கார்சாவி

இதற்கான அறுவை சிகிச்சைக்காக 400 டாலர்களை அவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டீசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். டெஸ்டால சிப் வெறம் கார் சாவி மட்டுமல்ல என்றும், அதனை தகவல் சேமிப்பு, கிரிப்டோ வேலட், எதிர்காலத்தில் அது கிரெடிட் கார்டாக கூட பயன்படுத்த முடியும் என்று கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று 400 டாலர் செலவு செய்து இளைஞர் செய்துள்ள இந்த அரிய முயற்சி சாதகமாகவும், பாதகமாகவும் சில கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web