வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

 
காளை


வங்கிக்குள் அழையாத விருந்தாளியாக காளை மாடு ஒன்று நுழைந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கதிகலங்க வைத்த சம்பவம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காளை

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்று காலை நேரத்தில் வங்கி ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பணபரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வாடிக்கையாளர்களும் வங்கியில் குவிந்தனர். அபோது வங்கிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காளை ஒன்று நுழைந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர், சுவரின் பின்னால் சென்று மறைந்து கொண்டனர். பின்னர் இது குறித்து மாநகர கால்நடைத்துறை பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற பணியாளர்கள், வங்கிக்குள் அத்துமீறி நுழைந்த காளையை லாவகமாக பிடித்து சென்றனர். வங்கிக்குள் நுழைவதற்கு முன்னர் அந்த காளை வங்கி வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களை சேதப்படுத்தியுள்ளது. இதை வேடிக்கை பார்த்த ஒரு நபரையும் லேசாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த வீடியோவில் வங்கிக்குள் காளை நுழைவதையும், எப்போதும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரதான சாலையில், ஒரு வங்கிக்குள் காளை ஒன்று நுழைந்து அனைவரையும் அச்சப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web