பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேலின் சகோதரி திடீர் மரணம்!

 
அர்ச்சுதா படேல்

பிரபல ஆர்.சி.பி. கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேலின் சகோதரி அர்ச்சுதா படேல் திடீர் மரணமடைந்தது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியை வென்ற பிறகு பிரபல ஆர்.சி.பி. வீரர் ஹர்ஷல் படேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இளைய சகோதரி இறந்த செய்தி கிடைத்திருந்தது. இதையடுத்து, ஐ.பி.எல். பயோ பப்பில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விலகியுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஹர்ஷல், 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். 

கடந்த 2 சீசன்களில் ஹர்ஷல் படேல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த விளையாட்டின் இறுதியில் ஹர்ஷல் படேலுக்கு வெற்றியைக் கொண்டாட முடியாதவாறு இந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

இதனால் அணியில் இருந்து அவர் வெளியேறினார். கடந்த 2021 சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை முறியடித்துள்ளார். அந்த விளையாட்டை முடித்துக் கொண்டு ஹர்ஷல் பட்டேல் மும்பையில் இருந்து புனேவுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஹர்ஷல் படேலின் உடன் பிறந்த சகோதரி இறந்த செய்தியை கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியானார்.

அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டரான ஹர்ஷல் பட்டேல், கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அணியில் இணைவதற்காக அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். ஹர்ஷலுக்கு தபன் படேல் என்கிற சகோதரரும், அர்ச்சிதா படேல் என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். 

ஹர்ஷல் படேல்

இந்நிலையில், அவரது இளைய சகோதரி அர்ச்சிதா படேல் திடீரென மரணமடைந்துள்ளார்.  அணியின் பிற வீரர்கள், இந்த மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து, தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தைக் கைவிட்டனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web