ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா? !!

 
இனி வாழ்வில் எப்போதும் ஜெயம் தான்! விஜயதசமியன்று செய்ய வேண்டிய அம்பிகை வழிபாடு!!


பூமாதேவி இந்த பூலோகத்தில் அம்பிகையாக அவதரித்த மாதமே ஆடி மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க  வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 
 பொதுவாக தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் பொழுதாக உள்ளது.  ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். அதில் ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

அதிர்ஷ்டம் தரும் ஆடிவெள்ளி அம்பிகை வழிபாடு!
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. அதற்கேற்ப ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.  ஆடி மாத விரதங்கள் இருப்பவர்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் கிட்டும். அத்துடன் கல்வி, கேள்வி செல்வம், குழந்தைப்பேறு  என எண்ணிய யாவும் ஈடேறும்.  ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளை  செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.இந்த நாளில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதம். ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என பல சிறப்பு வாய்ந்த விரத மற்றும்  விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகின்றன

 ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். அம்பிகை ஆலயங்களில்   ஆடி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் அனைத்து நாட்களுமே சிறப்பு தான் என்றாலும்  செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.  

அம்பிகை
அதே நேரத்தில் ஆடி மாதத்தில்  நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து உண்டு. இதற்கான காரணம் ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டிய மாதம். இதனால் மற்ற  விசேஷங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து  இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதற்கு தடங்கலாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என சொல்லி வைத்தார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web