அரசு பள்ளிக்கூட இடத்தில் குடிசைப் போட்டு திமுக ஊராட்சி தலைவரின் கணவர் அட்ராசிட்டி! நடவடிக்கை பாயுமா?!

 
விஜயா

’‘எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்கிற ரீதியில் திமுகவில் வட்டம், சதுரம், சதுரங்கம், முக்கோணம் என்று திரும்புகிற பக்கம் எல்லாம் பதவியில் இருப்பவர்களும், அவர்களது உறவினர்களும் அராஜகம் செய்து வருகின்றனர். பஜ்ஜி கடைகளில் பணம் தராததில் துவங்கி, பொதுமக்களை ஏய்.. என்று மிரட்டும் ஆளுங்கட்சி அமைச்சர் வரையில் பொதுமக்களிடையே ஆட்சிக்கு ‘ரொம்ப நல்ல பெயர்’ வாங்கி தருகிறார்கள்.

’என்னோட தூக்கமே போச்சு.. காலையில எழுந்திரிக்கும் போதே இன்னைக்கு யாரும் எந்த பிரச்சனையிலும் சிக்க கூடாது.. ’ என்று மேடையில் முதல்வர் புலம்பும் அளவுக்கு கட்சியினரின் அத்து மீறல் இருக்கிறது. மக்களுக்காக நிஜமாகவே திட்டங்களைத் தீட்டி, பாடுபடுகிற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இது போன்ற கட்சியினர் அவப்பெயரைத் தான் தேடி தருகின்றனர். இந்நிலையில், மதுரை உ சிலம்பட்டியில் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க. ஊராட்சி தலைவரின் கணவர் குடிசை போட்டு அராஜகம் செய்து வருகிறார். இது குறித்து யாராவது அவரிடம் கேள்வி எழுப்பினால், பத்து வருஷமா நாங்க ஆட்சியில இல்லையில்ல.. அதுக்கும் சேர்த்து தான்’ என்று அடாவடியாக பேசி வருகிறாராம். 

திமுக கொண்டாட்டம்1

மதுரை, உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் கட்டடங்களில் ஒன்று சேதமடைந்ததால் இடித்து தகர்க்கப்பட்டது. இதே போல், பள்ளியின் மற்ற கட்டடங்களும் பராமரிப்பில்லாததால் மாணவர்கள், பெற்றோர் கடந்த டிசம்பர் 8ம் தேதி மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக் கட்டடங்களை பராமரிக்கவும், இடித்த இடத்தில் புதிய கட்டடம் கட்டவும் அப்போது கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பணிகளுக்கு 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், ஊராட்சி தலைவர் விஜயாவின் கணவர் கண்ணன், குடிசை அமைத்து அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

police

புதிய கட்டடத்தின் நீள, அகலத்திற்கு ஏற்ப பழைய கட்டடம் இடித்த பகுதியில் இடம் இல்லை. எனவே, மாற்று இடத்தில் கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து குடிசை அமைத்துள்ளோம் என்றார். மேலும் மாற்று இடத்தில் கட்டடம் கட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பள்ளி இடத்தில் குடிசை அமைத்துள்ளதை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளதாக ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவைச் சேர்ந்தவர் ஒப்பந்தம் எடுத்துள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய கல்வி கிடைக்கும் வகையில் விரைவாக கட்டிடத்தை கட்டவேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web