நடிகை குஷ்பு காயம்.. வைரல் புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !!
தமிழ் சினிமாவில் 1990களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என டாப் நடிகர்கள் பலருடனும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை குஷ்பு பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோயினாக மின்னியது தென்னிந்திய சினிமாவில் தான். தமிழ், மலையாளம், தெலுங்கு என கலக்கி வந்த குஷ்பு, பீக்கில் இருந்த போதே இயக்குநர் சந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 50 வயதை கடந்த போதும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதே இளமையுடன் உலா வருகிறார். இதனால் இவருக்கும் ரசிகர்கள் பட்டாளமும் உற்சாகத்தில் உள்ளனர். தற்போதும் சினிமா சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார்.
அதாவது, நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பிசியாக இருக்கும் குஷ்பு, ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருத்து கூறி வருகிறார். அதோடு பாஜகவின் நிலைப்பாடு தொடர்பான கருத்துகளையும் கூறிவருகிறார். மேலும் அவ்வப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதாவது விபத்தில் சிக்கியுள்ள குஷ்பு காலில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அவர் பயணம் மேற்கொள்ள இருந்தபோது திடீரென காலில் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதற்காகச் சிகிச்சை பெற்று வரும் அவர், “உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, விசித்திரமான விபத்து, வலிகளை ஏற்படுத்தும்போது ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என் பயணம் நிற்காது. சாதிக்கும் வரை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் நீங்கள் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் குஷ்புவின் பதிவுக்கு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.