நடிகர் அஜித்தின் தோழி பாஜகவில் இணைந்தார்! இந்தியாவின் முதல் பைக் ரேசர்!

 
அஜித் அலிசா

நடிகர் அஜித்தின் நெருங்கின தோழியும், இரும்புக் குதிரை, சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான பிரபல பைக் ரேசர் அலிசா அப்துல்லா நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை  முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். 

நடிகை அலிசா அப்துல்லா பைக் ரேசிங்கில்  இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம்  வென்ற  முதல்  பெண்  என்ற  பெருமையை  பெற்றிருப்பவர்.  மேலும்,  இந்தியாவின் முதல்  பெண்  தேசிய  பந்தய  சாம்பியன்  என்ற  பெருமைக்கு  சொந்தக்காரர்.  இதுதவிர,  பெண்  அஜித்  என்று  ரசிகர்களால்  அன்புடன்  அழைக்கப்பட்டு  வருகிறார்.  நடிகர்  அஜித்  குடும்பமும்  இவரது  குடும்பமும்  மிகவும்  நெருக்கமானவர்கள்.  குறிப்பாக  அஜித்தின்  பெண்  தோழி  பட்டியலில்  இவருக்கு  தான்  எப்போதும் முதலிடம்.

இந்நிலையில் அலிசா அப்துல்லா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் துண்டை அணிவித்த அண்ணாமலை  சிறப்பாக வரவேற்றார். மேலும் தங்களது பணியில் அலிசா அப்துல்லா இணைந்துள்ளது மகிழ்ச்சி என்றும், தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மக்கள் பணிகளை செய்ய  அதனை முன்னின்று ஒருங்கிணைக்க அவர் கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு அங்கு வருகை புரிபவர்களுக்கு சிறப்பு உணவு வழங்க கேட்டுகொண்டார்.

அலிசா அப்துல்லா

 இந்நிலையில் திராவிட சிந்தனை உள்ள  தமிழகத்தில்  பாஜக, மெல்ல மெல்ல ஆர்.எஸ்.எஸ் , பிஜேபி மூலமாக பிரிவினை வாதத்தை தூண்ட நினைப்பதாகவும் இதற்காக பெரிய, பெரிய தலைவர்கள் சமூக ஆர்வலர்கள்,  திரைத்துறையினர், பிரபலங்களை தங்கள் கட்சியில் வளைத்து போட நினைப்பதாகவும் அவ்வாறு வரும் பிரபலங்களை வைத்து கட்சியை வளர்க்க நினைப்பதாகவும் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web