தில் இருந்தா வாங்க…! பேய் படங்களைப் பார்த்தால் ரூ. 95,000 பரிசு!

 
தில் இருந்தா வாங்க…! பேய் படங்களைப் பார்த்தால் ரூ. 95,000 பரிசு!

பரோட்டா சாப்பிடுவது மாதிரி தான். ஆனால் மறுபடியும் முதல்லேயிருந்து எண்ணு என்று போங்கு ஆட்டம் எல்லாம் ஆட முடியாது. நிஜமாகவே பேய் படங்களைப் பார்ப்பதற்கு ரூபாய் 95 ,000 பரிசு அறிவித்திருக்கிறது ஓர் அமெரிக்க நிறுவனம்.

தில் இருந்தா வாங்க…! பேய் படங்களைப் பார்த்தால் ரூ. 95,000 பரிசு!

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஹாரர் மூவி ஹார்ட் ரேட் என்கிற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொள்கிறது. இந்த ஆய்வில், தொடர்ந்து 10 நாட்களுக்கு 13 திகில் படங்களை திரையிட இருக்கிறார்கள். நம்ம ஊரு பிக்பாஸ் மாதிரி. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. அந்த பேய் படங்களை பார்க்கும் ரசிகர்களுடைய இதயத்துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் முழுக்க முழுக்க ஆய்வுக்காக மட்டுமே. முன்கூட்டியே இந்த ஆய்வுக்காக திரையிடப்படும் படங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன.

தில் இருந்தா வாங்க…! பேய் படங்களைப் பார்த்தால் ரூ. 95,000 பரிசு!

இந்த ஆய்வின் மூலம் அதிக பட்ஜெட் திகில் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை அளிக்கிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். மேலும் இந்த போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 13 பயங்கரமான திகில் படங்களைத் தொடர்ந்து பார்த்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கு ரூ. 95 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

From around the web