900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை... அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!
தமிழகத்தில் போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் விவரங்களை பார்த்து அதில் போலியாக, முறைகேடாக சேர்ந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தது. இதற்காக 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!