மீண்டும் அதிர்ச்சி... புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுத்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்து அழைத்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாநில அரசும், மத்திய அரசும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முன்வரவில்லை. இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையின் சிறைப்பிடித்து கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீனவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்த நிலையிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அக்கறை எடுப்பதிலை. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், அவர்கள் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்தியா, இது குறித்து தனது எதிர்ப்பைக் கூட இலங்கையிடம் ஒரு போதும் தெரிவித்ததில்லை. மத்திய அரசு தமிழக மீனவர்களின் கைதுக்கு இதுவரை ஒருமுறை கூட கண்டனம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்த இந்த நிலை, கடந்த 10 வருட பாஜக ஆட்சியிலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!