9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று மறைமுக தேர்தல்

 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று மறைமுக தேர்தல்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் 9 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், 74 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள், 2,901 கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இப்பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவர்கள். இந்த தேர்தல் மறைமுக நடத்தப்படுகிறது.

From around the web