அதிர்ச்சி... ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு!

 
ஆப்கானிஸ்தான்
 

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென  கண்ணிவெடி வெடித்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில், ஜெரோ மாவட்டத்தில் குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான்

அப்போது அந்த பகுதியில் கீழே கிடந்த பழைய கண்ணிவெடி ஒன்றை எடுத்து, அது என்னவென்றே தெரியாத நிலையில், கண்ணிவெடியை வைத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். எதிர்பாராத நிலையில், திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியதில், 5 முதல் 10 வயதுடைய சிறுவர்கள், 4 சிறுமிகள் என  9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்


ஆப்கானிஸ்தானில், இந்த கண்ணிவெடிகள் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஹமிதுல்லா நிசார் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
ஆப்கானிஸ்தானில், இது போன்ற வெடிக்காத கண்ணிவெடிகள் தற்போது திடீரென வெடிப்பதால் பலர் கண்ணிவெடிகளில் சிக்கி உயிரிழப்பதாகவும், ஊனமுற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web