தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பக்தர்களுக்கு அனுமதி!

மாவட்ட ஆட்சியர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வரும் மார்ச் 14-ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மார்ச் 15-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதையடுத்து, கொடியிறக்கத்துக்குப் பின்னர் திருவிழா நிறைவடையும். இந்த விழாவில் 4,000 இலங்கை, 4,000 இந்திய பக்தர்கள் என மொத்தம் 8,00 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!