இரண்டு மகள்களையும் கொன்று 7மாத கர்ப்பிணி தாயும் தற்கொலை!

 
தற்கொலை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தாய் தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள் இருந்தனர். மாதம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மாதம்மாள் தனது 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிக்கு சென்றார். 

தற்கொலை

அதன் பின்னர் சமாதானமடைந்த மாதம்மாள் மகள்களை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு வந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் மாதம்மாளையும் அவரது இரு மகள்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் உறவினர்களும், நண்பர்களிடம் விசாரித்தும், பல்வேறு இடங்களில் இவர்களைத் தேடியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரவியின் வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் மாதம்மாள், 2 குழந்தைகளின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மாதம்மாளின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ரவியும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது கிணற்றில் மூன்று பேரும் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். 

போலீசாரின் விசாரணையில் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்த ரவி தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலை முடிந்து நேராக வீட்டிற்கு வராமல் எங்கே சென்றுவிட்டு வருகிறாய் எனக் கேட்டு மாதம்மாள் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு எற்பட்டு மோதல் வந்துள்ளது. 

தன்னிடம் கணவர் உண்மையை மறைக்கிறார் என்ற கோபித்துக் கொண்டு கடந்த வாரம் அக்கரைப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் மாதம்மாள்.  பின்னர் சமாதானமடைந்து மீண்டும் வந்தவர், இதே தகராறில் மனமுடைந்து, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களைக் கடந்த நிலையில் தற்கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  2 மகள்களையும் கொலைச் செய்து விட்டு 7 மாத கர்ப்பிணி பெண்ணும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web