அசத்தல்... கல்விக்கு வயது தடையில்ல... 78 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்!
கல்வி கற்க வயது ஒரு தடையே இல்லை என்பதை மீண்டும் ஒரு முதியவர் நிரூபித்துள்ளார். அந்த வகையில் இன்று செப்டம்பர் 24ம் தேதி நடந்து முடிந்த சென்னைப் பல்கலைக்கழக 166வது பட்டமளிப்பு விழாவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 78 வயது தங்கமணி முனைவர் பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக 166வது பட்டமளிப்பு விழாவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தங்கமணி முனைவர் பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கல்வி கற்பதற்கு, ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கும் வயது தடையில்லை என சாதித்துக் காட்டியிருக்கும் அவருக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் இந்திய அணுசக்தி துறை தலைவருமான அணில் கக்கோட்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழக 166வது பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், ஆளுநர் ஆ.என். ரவி 1031 மாணவர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில்தான், கன்னியாகுமரியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தங்கமணி இலக்கியத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தங்கமணி 78 வயதில் இலக்கியத் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று இருப்பது, கல்வி கற்பதற்கும், முனைவர் பட்டம் பெறுவதற்கும் வயது தடையில்லை என்பதற்கு உதாரணமாக எடுத்துக்காட்டுகிறது. 78 வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தங்கமணிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் 89053 பேருக்கும், தொலைதூர கல்வி நிலையத்தில் பயின்ற 16,263 பேருக்கும், பல்கலைக்கழக துறைசார்ந்த 1,404 பேருக்கும், முனைவர் பட்டம் 70 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.