ரசிகர்கள் அதிர்ச்சி... டி20 உலகக்கோப்பை : நாளை இறுதிப் போட்டியில் கனமழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு!

 
இந்தியா
 

டி20 கிரிக்கெட் திருவிழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது இந்திய டி20 கிரிக்கெட் அணி. முக்கியமான போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லை என்பதால் கிட்டத்தட்ட கோப்பையை இந்தியா கைப்பற்றியதாகவே கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.


இந்நிலையில், நாளை தென்னப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.நாளை ஜூலை 29ம் தேதி பார்படாஸில் தென்னப்பிரிக்கா, இந்திய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் நாளை கனமழை பெய்ய வாய்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்து, இந்தியா விளையாடிய அரையிறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
நாளைய போட்டி திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். கடந்த 2002ம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா- இலங்கை ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இப்போது, டி 20-ல்  ​​இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி முழுமையடையவில்லை என்றால், இந்த அணிகளும் கூட்டு சாம்பியனாகும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web