தமிழகத்தில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு... அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மேலும் 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, சமீபத்தில் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு (தஞ்சை மாவட்டம்) ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி, போளூர், செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), சங்ககிரி (சேலம் மாவட்டம்), கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் இங்கு பாதாள சாக்கடை வசதி, சுகாதாரமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதேவேளையில் சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்டவை உயரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!