ஒரே பைக்கில் 7 பேர்... ரூ9500 அபராதம் விதித்து தட்டித் தூக்கிய காவல்துறை!

 
பைக்கில் 7 பேர்


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹபூரில் 7 பேருடன் பைக்கில் சென்றவருக்கு காவல்துறையினர் ரூ9,500  அபராதம் விதித்துள்ளது.   குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது  நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற வீடியோ  வைரலாகி வருகிறது. இந்நிலையில்  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துள்ளனர்.


ஒரே ஒரு பைக்கில் இடமே இல்லாத வகையில் ஒரு சிறிய குழந்தையை தனது கழுத்துக்கு மேல்  வைத்து கொண்டு பைக்கில் சென்றார். கீழே விழுந்தால் என்ன ஆகலாம் என யோசிக்காமல் போய்க்கொண்டு இருந்தனர். இந்நிலையில், வீடியோவை பார்த்த பலரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனம் ஓட்டுபவரை கைது செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.  

போலீஸ்
காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில், வீடியோ ஹபூரின் சிம்பவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரோடா தரியாபூர் கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்டது தெரிய வந்தது.  இச்சம்பவம் குறித்து  போக்குவரத்து காவல் அதிகாரி  , “7 பேர் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில்  பார்த்தோம். ஹபூரின் சிம்போலி காவல் நிலையத்தின் ஹரோரா சாலையில் இருந்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.9500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும்  போக்குவரத்து விதிகளுக்கு முரணான எதையும் செய்ய வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web