19 வயதில் 7 மாத கர்ப்பம்... இளம்பெண் படுகொலை... திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல்!

 
சோனி
 

19 வயசு மாணவி, தனது காதலனைத் திருமணம் செய்துக் கொள்ளக் கூறி வற்புறுத்தி வந்ததால் 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை காதலன் கொடூரமாக கொலைச் செய்துள்ள சம்பவம் டெல்லியை அதிர செய்துள்ளது.

சோனி என்ற 19 வயது இளம்பெண்ணை அவளது காதலன் சஞ்சு என்கிற சலீம், இரண்டு பேருடன் சேர்ந்துக் கொடூரமாக கொலைச் செய்ததாக கூறப்படுகிறது. 

கொலைச் செய்யப்பட்ட இளம்பெண் 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், தன்னை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளக் கோரி சலீமை வற்புறுத்தி வந்ததால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக போலீசாரின் விசாரணையில் வெளியாகி இருக்கிறது. 

இந்த கொலை வழக்கில் சலீம் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

சோனி

இது குறித்து போலீசார் கூறுகையில், சோனி தனது காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக காதலர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும் போது சலீம் சோனியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த கோரிக்கையை சோனி மறுத்து விட்டார். 

சோனி அடிக்கடி யாரிடமாவது செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை கவனித்ததாக அவளது பெற்றோர் போலீசாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை சோனி சலீமை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து அவளுக்கு சொந்தமான சில  பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சோனி 

போலீசாரின் விசாரணையில், சலீம், மேலும் இருவரின் உதவியுடன், சோனியை ஹரியானாவின் ரோஹ்தக் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் அவளைக் கொலை செய்து உடலைப் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. சோனி, இன்ஸ்டாகிராமில் 6,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் சலீமுடன் புகைப்படங்களையும், வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார். சமூக ஊடக தளங்களில் சோனியின் பல படங்களையும் சலீம் வெளியிட்டதாக காவல்துறையினர் கூறினர். இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web