சீக்கிரமா வீட்டுக்கு போங்க... நள்ளிரவு வரை 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

 
மழை

 இந்தியாவில் ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5ம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

5 மாவட்டங்களில் கன மழை

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web