உஷார் மக்களே... 3 வயது குழந்தை உட்பட ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு... !

 
உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

தமிழகத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டெங்கு பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

டெங்கு


புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில், மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலைகள் அடிக்கடி மாறி வரும் நிலையில்  கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 79 பேர்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதில்  3 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்  திறக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில்  குடியிருப்பு பகுதிகளில்  டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் நடமாடும் மருத்துவமனை மூலமாக சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. கிராமப்புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 10 நாட்கள் வரை பாதிப்பு நீளுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் கூறியுள்ளனர்.  

பிலிப்பைன்ஸ் டெங்கு


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும்   44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் இதுவரை 1237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 34142 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் மேலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web