சுவர் சரிந்து 6 பெண்கள் உடல் நசுங்கி துடிதுடித்து பலி.... 4 பேர் படுகாயம்... !
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தி நகர் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனி நபருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த இந்த வீட்டினைச் சுற்றி 30 அடி உயரத்திற்கு கருங்கற்களால் தடுப்புச்சுவரும் கட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வீட்டின் இடது புறத்தில் பாதுகாப்பிற்காக சுமார் 50 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று வீட்டின் மேல்புறத்தில் அமைந்திருந்த பயன்படுத்தப்படாத பழைய கழிப்பிடம் வலுவிழந்து திடீரென சரிந்து கீழே விழுந்தது. இடிந்து விழுந்து பாகங்கள் கட்டிடத்தின் கீழ் புறத்தில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சுவர் விழுந்தது.
இந்த கோர விபத்தால் பாக்கியா, ராதா, சக்கிலா, முத்துலட்சுமி, உமாபதி என 6 பெண்கள் உடல் நசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க