பல்லி விழுந்த பிரியாணியை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் கொருக்குப்பேட்டை பகுதியில் பிஸ்மி உணவகத்தில் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். வீட்டில் உள்ள அனைவரும் அந்த பிரியாணியை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் இரண்டு மகன்கள் வாந்தி எடுகக்த் தொடங்கினர். உடனடியாக பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது பிரியாணியில் உயிரிழந்த நிலையில், பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து ராஜ்குமார், அவரது மனைவி சுவாதி, இரண்டு மகன்கள், ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரியாணியில் கிடந்த பல்லியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!