பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயரத்தில் வேல்... ரஷ்ய பக்தர்கள் காணிக்கை!
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதே போல் மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை ரஷ்ய பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றைத் தங்களுடன் கொண்டு வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த 6 அடி உயரம் கொண்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தினர். வெளிநாட்டு பக்தர்கள் வேலுடன் பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தது கோவிலில் இருந்த பிற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!