வைரல் வீடியோ.... 6.4 மீட்டர் நீளத்தில் ராட்சத அனகோண்டா... தெறித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்!

பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் அனகோண்டாவை பார்த்திருப்போம். இதன் உண்மை பின்னணி தெரிய வாய்ப்புகள் நமக்கு குறைச்சல் தான். ஏனெனில் இந்தியாவில் ஆசிய நிலப்பரப்பில் மலைவகை பாம்பு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை. இவை சராசரியாக 21 அடி நீளம் (6.4 மீட்டர்) நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை.
பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மட்டும் காணப்படும் அனகோண்டா வகை மலைப்பாம்புகள், அங்குள்ள மண்வளத்துக்கு ஏற்ப பிரம்மாண்டமான அளவில் வளரக்கூடியவை. உலகில் மழையை ஏற்படுத்த மிகப்பெரிய காரணமாக இருக்கும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் வனங்களில் வாழும் அனகோண்டா உலக அளவில் மிகப்பெரியவை.
இவை 10 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவை ஆகும். அதேபோல, குறைந்தது 15 அடி முதல் 30 அடி (9 மீ) நீளம் வரை சாதரணமாக வளரும் தன்மை தன்மை கொண்டவை. மேலும், 150 கிலோ எடையில் இருந்து 250 கிலோ எடையுடன் காணப்படலாம். இந்திய வகை மலைப்பாம்புகள் 50 முதல் 100 கிலோ எடையுடன் இருக்கும்.
அமேசான் காடுகளில் வாழும் மக்கள், அனகோண்டா பாம்புகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக, எப்போதும் விழிப்புடன் தான் இருப்பார்கள். நன்கு வளர்ந்த அனகோண்டா மனிதர்கள், காட்டு எருமை போன்ற அதிக எடை கொண்ட உயிரினங்களையும் விழுங்கும் திறன் கொண்டவை.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் உள்ள ஜார்டிம் பகுதியில் ஆற்றில் அனகோண்டா பாம்பு காணப்படுகிறது. அங்கு சென்ற சுற்றுலா சென்ற பயணிகள் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இதன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!