நாளை காலை வரை சென்னை விமான நிலையம் மூடல்... அனைத்து விமானங்களும் ரத்து!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெங்கால் புயல் மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரவு 7.30 மணி வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கிறது. இதனால் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!