திருச்செந்தூரில் 50 அடி உள்வாங்கிய கடல்... அலறி அடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்!

 
தூத்துக்குடி

 தூத்துக்குடி மாவட்டத்தில் முருகனின் படைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பொதுவாக அமாவாசை, பௌர்ணமி நாட்கள் அதற்கு முந்தைய நாட்களில் திருச்செந்தூர்  அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில்  கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.  

திருச்செந்தூர் முருகன்

நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை  அமாவாசை தினமாகும். இதனை முன்னிட்டு இன்று காலையில் திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு  50 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது.

திருச்செந்தூர்

இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததை காண முடிந்தது. சிறிது நேரம் கழித்து பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web