பெரும் சோகம்... லாரி ஏறி சாலையோரம் தூங்கிய 5 தமிழர்கள் பலி!

 
லாரி

 கேரள மாநிலம் திருச்சூரில் தமிழகத்தில் வசித்து வரும்  சிலர் பணிநிமித்தமாக சென்றிருந்தனர். இதில்  சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது சரமாரியாக ஏறி இறங்கியது.

ஆம்புலன்ஸ்

இதில் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்


அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து  விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் லாரி ஓட்டுநர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. லாரி ஏறி 5 தமிழகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web