45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்! அய்யாக்கண்ணு அதிரடி !

 
45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்! அய்யாக்கண்ணு அதிரடி !


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்! அய்யாக்கண்ணு அதிரடி !

இதன் தலைவர் அய்யாக்கண்ணு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு விடுத்த செய்திக்குறிப்பில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் விற்பனைக்காக சாலை நெடுகில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. 17 சதவீதத்திற்கும் கூடுதலான ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்! அய்யாக்கண்ணு அதிரடி !

கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.20 கூலியாக அரசு வழங்க வேண்டும்.நெல் மட்டுமல்ல கரும்பு உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web