தமிழக மீனவர்கள் 38 பேரும் விடுதலை... நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!
தமிழக மீனவர்கள் 38 பேரை, இலங்கை சிறையில் இருந்து, நிபந்தனைகளுடன் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீதமுள்ள மீனவர்களையும் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அவ்வப்போது சிறைப்பிடித்து செல்வது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில், மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் குரல் கொடுக்காமல், கடும் நடவடிக்கை எடுக்காமலேயே இருந்து வருகின்றனர். பாகிஸ்தான், சீனா அத்துமீறலில் காட்டும் அக்கறையிலும், எதிர்ப்பிலும் ஒரு சதவிகிதம் கூட இலங்கைக்கு எதிராக மத்திய அரசு காட்டுவதில்லை. சமீபத்தில் தமிழக மீனவர்கள் 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் கைப்பற்றினார்கள். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது.
இதையடுத்து, 4 மீனவர்களை நேற்று இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில், இன்று 38 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் இந்த விடுதலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 67 பேரில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!