தமிழக மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை 3வது முறையாக இலங்கையில் காவல் நீட்டிப்பு!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்களுக்கு செப்டம்பர் 11ம் தேதி  வரை மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் ராமேஸ்வரம் போராட்டம்

ராமேசுஸ்ரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த  35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் ஆகஸ்ட் 8ம் தேதியன்று  கைது செய்தனர்.

மீனவர்கள் கைது

இதனையடுத்து 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல்  இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்கள் 35 பேருக்கும் செப்.11ம் தேதி வரை மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 35 பேரும் வாரியாபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web