விக்கிரவாண்டியில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

 
விக்கிரவாண்டி


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த   இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14 ம் தேதி தொடங்கி 21 ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட வேட்பு மனு தாக்கலில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்  கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விக்கிரவாண்டி


வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூன் 26 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்று தான்  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என தெரியவரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு ஜூலை 10 ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகளின்  எண்ணிக்கை 13 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web