பகீர்!? 32 குழந்தைகள் உயிரிழப்பு! 3வது அலையா!?

 
பகீர்!? 32 குழந்தைகள் உயிரிழப்பு! 3வது அலையா!?


இந்தியாவில் கொரோனா 2 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா போன்ற சில மாநிலங்களில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 வது அலை அச்சம் காரணமாக பல மாநிலங்கள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றன.

பகீர்!? 32 குழந்தைகள் உயிரிழப்பு! 3வது அலையா!?


அந்த வகையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் உத்தர பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. . உத்தர பிரதேசம் மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பகீர்!? 32 குழந்தைகள் உயிரிழப்பு! 3வது அலையா!?


இதனை ஆய்வு செய்த மருத்துவர்கள் இந்த மர்ம காய்ச்சல் டெங்கு அறிகுறிகளோடு ஒத்துள்ளன எனவும் அதனால் இவை டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பகீர்!? 32 குழந்தைகள் உயிரிழப்பு! 3வது அலையா!?

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், குழந்தைகளையும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த மர்ம காய்ச்சலை மேலும் பரவாமல் தடுக்கவும், பாதித்தவர்களை உடனடியாக குணப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு தளர்வு காரணமாக ஃபிரோசாபாத் பகுதியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கு காலவரையற்ற விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web