சோகம்... பள்ளத்துக்குள் லாரி கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
Aug 29, 2024, 10:50 IST
இந்தியாவில் அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அருணாசலப் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்கள் பயணம் செய்துக் கொண்டிருந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல்கள் ஹவல்தார் நகாத்சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டன.
ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்துக்கு ராணுவத்தின் கிழக்கு கமாண்டன்ட் இரங்கல் தெரிவித்துள்ளது. லெப்டி னன்ட் ஜெனரல் ஆர்.சி. திவாரியும் வீரர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
From
around the
web