3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்....!!
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து 3லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ரயில்கள், சிறப்பு ரயில்கள் முன்பதிவு, அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் விமானங்கள் என லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் சென்னை கோயம்பேடுக்கு வருகை தந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தமிழக அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னை ஆம்னி பேருந்து நிலையத்திலும் அதிக அளவிலான பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். அரசு பேருந்துகளை காட்டிலும் கட்டணம் கூடுதலாக இருந்தாலும் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அள்ளுபிடி தான். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நேரத்தில் ஏராளமான பொது மக்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடியதால் பேருந்து நிலையமெங்கும் திரும்பும் திசையெல்லாம் திருவிழா கூட்டம் போல காட்சி அளித்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை பெங்களூர் திரும்ப இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இரண்டு நாட்களில் 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!