முக்கிய இடங்களில் 3 நாட்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை... சென்னை மக்களே பதறாதீங்க...
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
2019ம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு படை இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி பயங்கரவாத தாக்குதலின் போது எவ்வாறு எதிர்கொள்வது எனபது குறித்து என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ளும்.
இன்று செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் செப்டம்பர் 17ம் தேதி வரை சென்னையில் 3முக்கிய இடங்களில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற இருக்கிறது. பயிற்சியின் போது 3 இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெடிகுண்டு வெடிக்க வைக்கப்படும்.தேசிய பாதுகாப்பு படையுடன் காவல்துறை, தமிழ்நாடு கமாண்டோ படை, தீயணைப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, மருத்துவத்துறை என அதிகாரிகளும் இந்த செயல்களில் ஈடுபடுத்தப்படுவர்.
இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் அடையவோ, பதற்றம் அடையவோ வேண்டாம் என ஏற்கனவே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பின் அவசர உதவி என் 100, 101, 112 மற்றும் 044-23452359 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் ஆலோசனை பெறலாம். இந்த ஒத்திகை இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நாளை காலை 8 மணி வரை முதற்கட்டமாகவும், நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி 17ம் தேதி காலை 6 மணி வரை இரண்டாவது கட்டமாகவும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!