லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார்... சிசிடிவில் சிக்கிய 3 பேர்!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அமைந்துள்ள கல்குவாரிகளில் இருந்து எம்சாண்ட், ஜல்லி, குண்டுக்கல் உட்பட கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பிட்ட சில லாரிகள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற லாரியை செங்கோட்டையில் 3 போலீஸ்காரர்கள் வழிமறித்து டிரைவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீஸ்காரர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். இந்த உத்தரவை தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் அதிரடியாக பிறப்பித்துள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா