இன்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!

 
இன்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!


தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.முதல் கட்டதேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!

இரண்டாவது கட்டமாக இன்று 9ம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இன்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!


9 மாவட்டங்களில் மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்களை போடவேண்டும்.காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டு பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், அழியாத மை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!

ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 100 மீட்டர் தூரத்துக்கு அடையாள கோடு வரையப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு பணிக்காக 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமும் வீடியோ மூலமும் ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது.


From around the web