நாயைக் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ25000 பரிசு.. வைரலாகும் போஸ்டர்!

 
நாய்

 மனிதர்களுடன் ஒட்டி உறவாடும் வீட்டு விலங்குகளில் நாய்கள் தான் முதலிடம். இவை மனிதர்களை காட்டிலும் அதிகம் பாசம் வைப்பவை.  நாயுடன் வாக்கிங் போகிறவர்கள், நாயை விசேஷங்களுக்கு அழைத்து செல்பவர்கள் ஏராளம். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எனவே முடியாத அளவுக்கு உள்ளனர். நாய்கள் தான் உலகம் என்ற அளவுக்கு ஒரு சிலரின் வாழ்க்கை அமைந்துள்ளது.  நாய்கள் நன்றி உள்ள பிராணி என்பது தான் இவைகளுக்கு காரணம். இவை  தன்னுடைய எஜமானர்களுக்காக எதையும் செய்ய துணியும்.

நாய்

இதனாலேயே நாய்களை பலருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட நாய்கள் ஒருவேளை உயிரிழந்துவிட்டால் அதன் உரிமையாளர்கள் துடித்துப் போய்விடுவர். அவை காணாமல் போனால்  தாங்கிக் கொள்ள முடியாது.இந்நிலையில் சென்னையில் தான் வளர்த்த நாயை காணவில்லை என உரிமையாளர் ஒட்டி உள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.  தாம்பரம் மற்றும் முடிச்சூர் சாலையில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரில் வெற்றி என்ற டாபர்மேன் நாய் காணவில்லை .
ரூபாய் பணம்அது குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ25000 சன்மானம் அளிக்கப்படும் என அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் அழைப்பதற்கு செல்போன் நம்பரும் இதில் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நாய்க்கு வந்த வாழ்வ பாரு... இந்த வீட்டில என்னை காணோம்னா என்னன்னு கேட்க நாதியில்ல... என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web